பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

சரஸ்வதி அந்தாதி : 18

சரஸ்வதி அந்தாதி : 18 “தனக்கே துணிபொரு ளென்னுந் தொல்வேதஞ் சதுர்முகத்தோன்எனக்கே சமைந்த வபிடேக மென்னு மிமையவர்தாமனக்கேத மாற்றுமருந் தென்ப சூடுமலரென் பன்யான்கனக்கேச பந்திக் கலைமங்கை பாத கமலங்களே” இப்பாடல் கீழ்கண்டவாறு பிரிந்து பொருள் தரும். “தனக்கே துணி பொருள் எனும் தொல்வேதம் சதுர்முகத்தோன்எனக்கே சமைந்த அபிடேகம் என இமையவர் தாம்மனகேதம் மாற்றும் மருந்தென்ப சூடுமலர் என்பன்யான்கனக்கேச பந்திக் கலைமங்கை பாத கமலங்களே” இனி பாடலின் பொருளைக் காணலாம். முதல் வரி “தனக்கே துணி பொருள் எனும் […]

சரஸ்வதி அந்தாதி : 17

சரஸ்வதி அந்தாதி : 17 “கருந்தா மரைமலர் கண்தா மரைமலர் காமருதாள்அருந்தா மரைமலர் செந்தா மரைமலர் ஆலயமாத்தருந்தா மரைமலர் வெண்டா மரைமலர் தாவிலெழில்பெருந்தா மரைமணக் குங்கலைக் கூட்டப் பிணைதனக்கே “ இந்தப் பாடல் கீழ்கண்டவாறு பிரிந்து பொருள் தரும். “கருந்தாமரை மலர் கண் தாமரைமலர் காமரு தாள்அருந்தாமரை மலர் செந்தாமரை மலர் ஆலயமாத்அருந்த தாமரைமலர் வெண் தாமரை மலர் தாவிழலில்பெரும் தாமரை மணக்கும் கலை கூட்ட பிணை தனக்கே” இனி பாடலின் பொருளைக் காணலாம். “கருந்தாமரை மலர் […]

சரஸ்வதி அந்தாதி : 16

சரஸ்வதி அந்தாதி : 16 ‘சரோருக மேதிருக் கோயிலும் கைகளும் தாளிணையும்உரோருக மும்திரு அல்குலும் நாபியும் ஓங்கிருள்போல்சிரோருகம் சூழ்ந்த வதனமும் நாட்டமும் சேயிதழும்ஒரோருகம் ஈரரை மாத்திரை யான உரைமகட்கே” இப்பாடல் கீழ்கண்டவாறு பிரிந்து வரும். “சரோருகமே திருக்கோயிலும் கைகளும் தாள் இணையும்உரோருகமும் திரு அல்குலும் நாபியும் ஒங்கிருள்போல்சிரோருகம் சூழ்ந்த வதனமும் நாட்டமும் சேயிதழும்ஓரோருகம் ஈரரை மாத்திரையான உரைமகட்கே” இனி பாடலின் பொருளைக் காணலாம். “சரோருகமே திருக்கோவில்” எனப் பாடல் தொடங்குகின்றது. அன்னை தாமரையில் அமர்ந்திருக்கின்றாள், அவள் இருக்குமிடமே […]

சரஸ்வதி அந்தாதி : 15

சரஸ்வதி அந்தாதி : 15 “நாயக மான மலரக மாவதுஞான வின்பச்சேயக மான மலரக மாவதுந் தீவினையாலேயக மாறி விடுமக மாவது மெவ்வுயிர்க்குந்தாயக மாவதுந் தாதார்சு வேதச ரோருகமே” இப்பாடல் கீழ்கண்டவாறு பிரிந்து பொருள் தரும். “நாயகம் ஆன மலரகம் ஆவதும் ஞானஇன்பச்சேயகம் ஆன மலரகம் ஆவதும் தீவினையாலேஅகம் மாறி விடும்அகம் ஆவதும் எவ்வுயிர்க்கும்தாயகம் ஆவதும் தாதார் சுவேத சரோருகமே “ இனி பாடலின் பொருளைக் காணலாம். முதல் வரி “நாயகம் ஆன மலரகம் ஆவதும்” என்றாகின்றது. […]

சரஸ்வதி அந்தாதி : 14

சரஸ்வதி அந்தாதி : 14 “வேதமும் வேதத்தி னந்தமு மந்தத்தின் மெய்ப்பொருளாம்பேதமும் பேதத்தின் மார்க்கமு மார்க்கப் பிணக்கறுக்கும்போதமும் போதவுரு வாகியெங் கும்பொதிந் தவிந்துநாதமு நாதவண் டார்க்கும்வெண் டாமரை நாயகியே.” இந்த பாடல் இப்படி விரிந்து பொருள் தரும். “வேதமும் வேதத்தின் அந்தமும் அந்தத்தின் மெய்ப்பொருளாம்பேதமும் பேதத்தின் மார்க்கமும் மார்க்கப் பிணக்கறுக்கும்போதமும் போத உருவாகி எங்கும் பொதிந்த விந்துநாதமும் நாத வண் டார்க்கும் வெண்டாமரை நாயகியே” இனி பாடலின் பொருளைக் காணலாம். முதல் வரி “வேதமும் வேதத்தின் அந்தமும் […]

சரஸ்வதி அந்தாதி : 13

சரஸ்வதி அந்தாதி : 13 “புரிகின்ற சிந்தையி னூடே புகுந்துபுகுந் திருளைஅரிகின்ற தாய்கின்ற வெல்லா வறிவினரும் பொருளைத்தெரிகின்ற வின்பங் கனிந்தூறி நெஞ்சந்தெ ளிந்துமுற்றவிரிகின்ற தெண்ணெண் கலைமானுணர்த்திய வேதமுமே” இப்பாடல் கீழ் கண்டவாறு பிரிந்து பொருள் தரும். “புரிகின்ற சிந்தையின் ஊடே புகுந்து புகுந்திருளைஅரிகின்றது ஆய்கின்ற எல்லா அறிவின் அரும்பொருளைத்தெரிகின்ற இன்பம் கனிந்தூறி நெஞ்சம் தெளிந்துமுற்றவிரிகின்றது எண்ணெண் கலைமான் உணர்த்திய வேதமுமே” இனிப் பாடலின் பொருளைக் காணலாம். முதல் வரி “புரிகின்ற சிந்தையின் ஊடே புகுந்து புகுந்திருளை” என […]

சரஸ்வதி அந்தாதி : 12

சரஸ்வதி அந்தாதி : 12 “தேவருந் தெய்வப் பெருமானு நான்மறை செப்புகின்றமூவருந் தானவரா கியுள் ளோருமுனி வரரும்யாவரு மேனையவெல் லாவுயிரு மிதழ் வெளுத்தபூவரு மாதினருள் கொண்டுஞா னம்புரி கின்றதே.” பாடலின் பொருளை வரி பிரித்துக் காணலாம். “தேவரும் தெய்வ பெருமானும் நான் மறை செப்புகின்ற” என முதல் வரி வருகின்றது. தேவரும் என்றால் தேவர்கள், முப்பத்து முக்கோடி தேவர்கள் என்ற பெரும் கூட்டமாகின்றது, வானலோகத்து தேவர்கள் எல்லோரும் எனப்பொருள். தெய்வ பெருமானும் என்றால் தேவர்களின் தலைவனான இந்திரனும் […]

சரஸ்வதி அந்தாதி : 11

சரஸ்வதி அந்தாதி : 11 “ஒருத்தியை யொன்றுமி லாவென் மனத்தினு வந்துதன்னைஇருத்தியை வெண்கமலத் திப்பாளை யெண்ணெண் கலைதோய்கருத்தியை யைம்புலனுங் கலங்காமற் கருத்தை யெல்லாம்திருத்தியை யான்மற வேன்றிசை நான்முகன் தேவியையே” இந்தப் பாடல் கீழ் கண்டவாறு பிரிந்து பொருள் தரும். “ஒருத்தியை ஒன்றும் இலாஎன் மனத்தின் உவந்துதன்னைஇருத்தியை வெண்கமலத் திருப்பாளை எண் எண் கலைதோய்கருத்தியை ஐம்புல னுங்கலங் காமல் கருத்தை யெல்லாம்திருத்தியை யான்மற வேன்திசை நான்முகன் தேவியையே” இனி பாடல் பொருளைக் காணலாம். “ஒருத்தியை ஒன்றும் இலாஎன் மனத்தின் […]

சரஸ்வதி அந்தாதி : 10

சரஸ்வதி அந்தாதி : 10 “புந்தியிற் கூரிரு ணீக்கும்புதிய மதிய மென்கோவந்தியிற் றோன்றிய தீபமென்கோ நல்லரு மறையோர்சந்தியிற் றோன்றுந் தபனனென் கோமணித்தா மமென்கோஉந்தியிற் றோன்றும் பிரான்புயந் தோயு மொருத்தியையே” இப்பாடல் கீழ் கண்டவாறு பிரிந்து வரும். “புந்தியில் கூரிருள் நீக்கும் புதிய மதியமென்கோஅந்தியில் தோன்றிய தீபமென் கோ-நல் அருமறையோர்சந்தியில் தோன்றும் தபனனென் கோ-மணித் தாமமென்கோஉந்தியில் தோன்றும் பிரான்புயம் தோயும் ஒருத்தியையே” இனி பாடலை விளக்கமாகக் காணலாம். “புந்தியில் கூரிருள் நீக்கும் புதிய மதியமென்கோ”. அதாவது “புந்தியில் கூரிருள் […]

சரஸ்வதி அந்தாதி : 09

சரஸ்வதி அந்தாதி : 09 “பாவும் தொடையும் பதங்களும் சீரும் பலவிதமாமேவும் கலைகள் விதிப்பா ளிடம்விதி யின்முதியநாவும் பகர்ந்ததொல் வேதங்கள் நான்கும் நறுங்கமலப்பூவும் திருப்பதம் பூவால் அணிபவர் புந்தியுமே” இப்பாடல் கீழ்கண்டவாறு பிரிந்து வரும். “பாவும் தொடையும் பதங்களும் சீரும் பலவிதமா(ய்)மேவும் கலைகள் விதிப்பாள் இடம் விதியின் முதியநாவும் பகர்ந்த தொல் வேதங்கள் நான்கும் நறுகமல‌பூவும் திருப்பதம் பூவால் அணிபவர் புந்தியுமே” முதல்வரி “பாவும் தொடையும் பதங்களும் சீரும் பலவிதமா(ய்)” என வரும், இது யாப்பிலக்கண அம்சங்கள். […]